அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
அரக்கோணம் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, பரமேஸ்வரமங்க லத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் எம்.எல்.ஏ. சு.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வள்ளி, கவிதா சங்கர், தலைமை ஆசிரியர்கள் மணிவண்ணன், ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கண்டீற்பாவை தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் மண்டல துணை தாசில்தார் சமரபுரி, தலைமையிடத்து துணை தாசில்தார் முத்துகுமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story