கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதிகளில் சுதந்திர தின விழா


கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதிகளில் சுதந்திர தின விழா
x

கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதிகளில் சுதந்திர தின விழா நடந்தது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர்:-

சுதந்திர விழா

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் இந்திராகாந்தி தேசியக்்கொடியை ஏற்றி வைத்தார்.இதில் துணை தலைவர் சந்திரசேகரன், செயல்அலுவலர் சரவணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ்குமார், கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 38 ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றினர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு பாஸ்கரன், ஒப்பந்தக்காரர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர், உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினத்தின் பேரன் வேதரெத்தினம், வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, வேதாரண்யம் காந்தி பூங்காவில் நகராட்சி பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன், தோப்புத்துறை அரசு மாதிரி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆரிபா, வட மழைரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நகர்மன்ற உறுப்பினர் குமரன், குரவப்புபம் சீதாலட்சுமி நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வேதாரண்யம் வர்த்தக சங்க கட்டிடத்தில் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, வேதாரண்யம் வடக்கு வீதியில் வணிகர் சங்க தலைவர் செந்தில், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. செம்போடை கிராமத்தில் மட்டும் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story