சுதந்திர திருநாள் அமுத பெருவிழா புகைப்பட கண்காட்சி நிறைவு


சுதந்திர திருநாள் அமுத பெருவிழா புகைப்பட கண்காட்சி நிறைவு
x

சுதந்திர திருநாள் அமுத பெருவிழா புகைப்பட கண்காட்சி நிறைவு பெற்றது.

கரூர்

கரூர்,

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு அரசு துறை திட்டங்களின் கண்காட்சி கடந்த 22-ந்தேதி தொடங்கியது. நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டு அரங்குகள் அமைத்து அனைத்து அரசு துறையை சேர்ந்த அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த கண்காட்சியில் டொம்பர் இன மக்களின் சாகச சர்க்கஸ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறை நாதஸ்வர உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி, கரூர் வெள்ளியணை பகவதி அம்மன் கலைக்குழுவின் தப்பாட்ட நிகழ்ச்சி, கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினரின் பல்வேறு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Next Story