பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்: கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழக வீரர் டி.லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.
சென்னை,
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழக வீரர் டி.லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.
இதுகுறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் ரைபில்மேன் பதவியில் பணியாற்றும் தமிழக ராணுவ வீரர் டி.லட்சுமணன் வீரமரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய கடமை மற்றும் உயிர் தியாகத்திற்கு இந்த தேசம் எப்பொழுதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையவும், இந்த இழப்பை தாங்கிக்கொள்ளும் தைரியத்தையும், தெம்பையும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story