இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்
துவாக்குடி, சமயபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. துவாக்குடியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவாக்குடி, சமயபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. துவாக்குடியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
கட்டண உயர்வு
திருச்சி துவாக்குடி, சமயபுரம் உள்பட தமிழகம் முழுவதும் 26 சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதை கண்டித்து துவாக்குடி சுங்கச்சாவடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருநெடுங்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.
தே.மு.தி.க. கையெழுத்து இயக்கம்
இதேபோல் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் தே.மு.தி.க. சார்பில் அதன் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் துவாக்குடி நகர நிர்வாகி சிங்காரவேல் மற்றும் நிர்வாகிகள் விஜய சுரேஷ், மகாமுனி, முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.