ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆதரவு


ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆதரவு
x

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்து உள்ளது.

திருநெல்வேலி

இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எஸ்.கமருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.தி.மு.க. வேட்பாளருக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர் வெற்றிக்காக பிரசாரம் செய்ய எனது தலைமையில் பிரசார குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரசார குழு தொகுதி முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும். இந்திய தேசிய முஸ்லிம் லீக் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவு கடிதத்தை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story