இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர்

விருத்தாசலம்

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கொடுமைப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும். அனைத்து நீதிமன்றங்களிலும் டாக்டர் அம்பேத்கர் படம் மற்றும் சிலை நிறுவ வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ஜெயசீலன், பிரபாகரன், பீமாராவ், சபரிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மங்கா பிள்ளை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஜெயபால், கதிர்காமன், ராமானுஜம், குமார், செந்தில், அம்பேத், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழவெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story