அரசூர் கூட்டுரோட்டில்இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அரசூர் கூட்டுரோட்டில்இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:45 PM GMT)

அரசூர் கூட்டுரோட்டில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் தெற்கு மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் கூட்டுரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய குடியரசு கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் இருவல்பட்டு குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தியாகராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் நாராயணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மணிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்லா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளரும், வக்கீலுமான பிரபு, மாநில இணை பொது செயலாளர் மங்காப்பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த சமூக விரோதிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரியும், சேலம் மாவட்டம் திருமலைக்கிரியில் கோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய கோரி கண்டன கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட அமைப்பாளர்கள் அழகிரி, ராஜா, மாவட்ட துணை தலைவர் கணேசன் மாவட்ட துணை செயலாளர் சம்பத், விழுப்புரம் நகர செயலாளர் சேவகன், ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி, ஒன்றிய மாணவரணி செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் முனியப்பன், சின்ன ராஜா, தனசேகர், ஸ்ரீதர், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழுப்புரம் நகரத் தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.


Next Story