இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அனைத்து மதசார்பற்ற ஜனநாயக அமைப்புகள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். செயலாளர் சர்புதீன் முன்னிலை வகித்தார். அனைத்து மதசார்பற்ற ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், ஜமாத்தார்களும், இடதுசாரி அமைப்புகளும், தந்தை பெரியாரிய-அண்ணல் அம்பேத்கர் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story