அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் தொழில்துறை அமைச்சர் ஆய்வு


அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில்  தொழில்துறை அமைச்சர் ஆய்வு
x

அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் தொழில்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்டு நிறுவன ஆலை வளாகக் கூட்ட அரங்கில் புதிய ஆலை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஆலையில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் பணியாளர் குடியிருப்பில் குடியிருப்போர் பயன்பாட்டிற்காக சிறுவர் பூங்காவினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சிமெண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் கண்ணன், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய ஆலையை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள், தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், விற்பனையை அதிகப்படுத்துதல் ஆகியவை குறித்து அலுவலர்களுடன் தொழில்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.


Next Story