நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாட்டில் புதிதாக 156 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 156 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 43 பேருக்கும்,செங்கல்பட்டில் 15 பேருக்கும், சேலத்தில் 15 பேருக்கும் கோவையில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story