வேளாண் அடுக்ககம் திட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 சர்வே எண்களுக்கு உரிய நிலங்களின் விவரங்கள் இணையத்தில் பதிவு வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


வேளாண் அடுக்ககம் திட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 சர்வே எண்களுக்கு உரிய நிலங்களின் விவரங்கள் இணையத்தில் பதிவு வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 விவசாய நிலங்களுக்கான விவரங்கள் மட்டுமே வேளாண் அடுக்ககம் திட்டத்தின் மூலம் கிரெய்ன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 விவசாய நிலங்களுக்கான விவரங்கள் மட்டுமே வேளாண் அடுக்ககம் திட்டத்தின் மூலம் கிரெய்ன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவி

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளாதவது:-

வேளாண் அடுக்ககம் திட்டத்தின் மூலம் அனைத்து சாகுபடி நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நிலஉடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நிலஉடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களைக் கொண்டு கிரெய்ன்ஸ் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் விவசாயிகள் பெரிதும் பயனடையும் வகையில் செயலாற்றும் வருவாய், வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, பட்டுவளர்ச்சி, உணவுவழங்கல், கால்நடை பராமரிப்பு உள்பட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதி செய்ய முடியும். ஒற்றைசாளர இணையதளமாக செயல்படுவதால் ஒரே இடத்தில் பதிவு செய்வதன் மூலம் அனைத்து துறைகளிலும் விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் இதுவரை பெற்ற நலத்திட்ட உதவிகளை நேரடியாக தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு முறையும் பயன்பெற விண்ணப்பிக்கும் போதும் விவசாயிகள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியதில்லை.

இணையதளத்தில் பதிவு

அத்துடன் விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் விபரங்களை பதிவேற்றம் செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளமுடியும். மேலும் நிதிசார்ந்த நலத்திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் 8 லட்சத்து 13 ஆயிரத்து 468 சர்வே எண்களுக்கு நில உரிமையாளர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலையில், இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 சர்வே எண்களுக்கான உரிமையாளர்களின் விவரங்கள் மட்டுமே கிரெய்ன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

ஆதலால், விடுபட்ட விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் கார்டு நகல், புகைப்படம், வங்கிகணக்கு புத்தக நகல் மற்றும் நிலப்பட்டா ஆவணநகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஒப்படைத்து, கிரெய்ன்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story