அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது - ஜெயக்குமார் பேட்டி


அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது  - ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 18 March 2023 12:39 PM GMT (Updated: 18 March 2023 12:45 PM GMT)

பாதுகாப்பு கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரும் 26-ந்தேதி நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி போடியிட்டின்றி தேர்வு ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விடுமுறை தினமான நாளை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்த மனுவை நாளை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உள்ளார்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ,

அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.உரிய பாதுகாப்பு கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் . ஏற்கனவே நடந்த சம்பவம் போல இந்த முறை நடக்கக்கூடாது என பாதுகாப்பு கோரியுள்ளோம் . காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன்;இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுத்துள்ளது .


Next Story