தகவல் தொழில்நுட்ப பயிற்சி


தகவல் தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தகவல் தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான எஸ்.ஏ.பி., டேட்டா அனலைஸ், ஆர்ட்டிபிகல் இன்டெலிஜன்ஸ், குளோவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மல்டிமீடியா, அனிமேஷன் 2டி, 3டி, அட்வான்ஸ் லெவல் டேலி இ.ஆர்.பி.9 போன்ற பயிற்சிகளை முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்து வருகிறது. இப்பயிற்சி பெற்றவர்கள் மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியினை பெற tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சிக்கான முழு கட்டணத்தினையும் தாட்கோ வழங்கும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story