பனியன் நிறுவன மேற்கூரை சரிந்து 3 பேர் காயம்


பனியன் நிறுவன மேற்கூரை சரிந்து 3 பேர் காயம்
x

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த போது பனியன் நிறுவன மேற்கூரை சரிந்து 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் எந்திரத்திற்கு கீழ் 30 தொழிலாளர்கள் படுத்துக்கொண்டதால் தப்பினர்.

திருப்பூர்

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த போது பனியன் நிறுவன மேற்கூரை சரிந்து 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் எந்திரத்திற்கு கீழ் 30 தொழிலாளர்கள் படுத்துக்கொண்டதால் தப்பினர்.

பனியன் நிறுவன மேற்கூரை விழுந்தது

திருப்பூர் கூலிபாளையத்தில் கிஷோர் கார்மென்ஸ் என்ற பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனம் 3000 சதுர அடி பரப்பளவில் ஒரே கட்டிடமாக உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூறை அலுமினிய தகடுகளால் ஆன குளிர்ச்சியான சீட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிங், டெய்லரிங், அயனிங் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மாலை 4.30 மணி அளவில் சில தொழிலாளர்கள் தேனீர் அருந்துவதற்காக வெளியே வந்து விட்டனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டும் நிறுவனத்தின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வானத்தில் கருமேகம் சூழ்ந்து சூறைக்காற்றுடன் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையில் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பனியன் நிறுவனத்தின் அலுமினியத்தால் ஆன தகர கொட்டகை அங்கும் இங்கும் அசைந்து பயங்கர சத்தம் வந்தது. இதனால் பயந்து போன தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியே வந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல சூறைக்காற்றின் வேகம் அதிகரித்ததால் மேற்கூரை தனியாக கழன்று நிறுவனத்திற்கு உள்ளே விழுந்தது. மேலும் பனியன் நிறுவனத்தின் சுவர்கள் இடிந்தது. அப்போது வாசல் ஓரம் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் அலறியடித்து வெளிேய ஓடி வந்தனர். சில தொழிலாளர்களால் ஓடமுடியவில்லை. இதில் 30 தொழிலாளர்கள் எந்திரத்தின் கீழ் படுத்துக் கொண்டனர்.

3 தொழிலாளர்கள் காயம்

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகள் உள்ளே தொழிலாளர்கள் இருக்கிறார்களா? என்று தேடிப்பார்த்தனர். அப்போது 3 தொழிலாளர்கள் மட்டும் சிக்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பத்திரமாக மீட்டனர். அப்போது அவர்களுக்கு லேசான காயம் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சூறைகாற்றுக்கு பல கோடி மதிப்பிலான ெபாருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

சூறைக்காற்றில் பனியன் நிறுவன மேற்கூரை சரிந்துவிழுந்ததில் 3 தொழிலாளர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story