நாமக்கல் அருகே கார் விபத்தில் அய்யப்ப பக்தர்கள் காயம்


நாமக்கல் அருகே  கார் விபத்தில் அய்யப்ப பக்தர்கள் காயம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:30 AM IST (Updated: 20 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே கார் விபத்தில் அய்யப்ப பக்தர்கள் காயம்

நாமக்கல்

நாமக்கல் அருகே கார் விபத்தில் அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.

சபரிமலை பயணம்

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கண்ணையா (வயது 35)‌. இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் 2 கார்களில் சபரிமலைக்கு சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊருக்கு காரில் சென்று உள்ளார்.

கண்ணையா காரை ஒட்டினார். நேற்று காலை 6.30 மணி அளவில் நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

விசாரணை

இதில் கண்ணையா படுகாயம் அடைந்தார். அவருடன் வந்த மேலும் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அய்யப்ப பக்தர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story