கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை, மகன் காயம்


கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை, மகன் காயம்
x
தினத்தந்தி 7 May 2023 12:30 AM IST (Updated: 7 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). இவர் தனது மகன் பேரரசுவுக்கு (9) உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடத்தூர் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சுரேஷ்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை, மகன் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரேஷ்குமார் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story