பச்சைத் தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு-பொரங்காடு சீமை படுகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்

பச்சைத் தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு-பொரங்காடு சீமை படுகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என பொரங்காடு சீமை படுகர் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

படுகர் நலச்சங்க கூட்டம்

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் நிர்வாகி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் உப தலைவர் போஜன் தலைமை வகித்தார். செயல் தலைவர் பாபு, பொருளாளர் சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணய வேண்டி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் தீர்ப்பில் விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தேயிலை வாரியம் அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால் விவசாயிகள் உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம்

எனவே தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினம் தோறும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெறும் 98 கிராமங்களுக்கான தேதிகள் வெளியிடப்பட்டன. மேலும் கோவை படுகர் சங்கம், சென்னை படுகர் சங்கம், திருப்பூர் படுகர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக கிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ரவி நன்றி கூறினார்.

Next Story