டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா?


டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா?
x

தாராபுரத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து டாஸ்மாக் கோவை மண்டல துணை மேலாளர் ஆய்வு நடத்தினார்.

திருப்பூர்

தாராபுரத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து டாஸ்மாக் கோவை மண்டல துணை மேலாளர் ஆய்வு நடத்தினார்.

டாஸ்மாக் கடை

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்பனையாளர்களால் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை என பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இது குறித்து தாராபுரம் பகுதியில் இருந்து மதுபிரியர்கள் கோவை மண்டல மேலாளருக்கு புகார் மனுக்கள் அனுப்பினார்கள்.

இந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் ெஜகதீசன் தாராபுரம் வந்தார்.

பின்னர் அவர் தாராபுரம் ஐந்து முக்கு, என்.என்.பேட்டை வீதி, பஸ் நிறுத்தம், பொள்ளாச்சி ரோடு, உடுமலை ரோடு, அலங்கியம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா?

அப்போது டாஸ்மாக் கடைகளில் இருப்பு பதிவேட்டின்படி மது பாட்டில்கள் இருப்பு உள்ளதா? பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Related Tags :
Next Story