பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்காலை உணவின் தரம் குறித்து பேரூராட்சி தலைவர் ஆய்வு
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவின் தரம் குறித்து பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
பாலக்கோடு
பாலக்கோடு அக்ரஹாரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் காலை உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும், காலாவதியான சமையல் பொருட்களை பயன்படுத்துவதாகவும், இதனால் காலை உணவு சாப்பிட தகுந்ததாக இல்லை என மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறினர். இது குறித்து பெற்றோர்கள் பேரூராட்சி தலைவர் முரளியிடம் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை அக்ரஹாரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவின் தரம் குறித்து பேரூராட்சி தலைவர் முரளி ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு வழங்கிய உணவை சாப்பிட்டார். அப்போது உணவில் சுவை குறைவாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருப்பு வைக்கப்பட்டுள்ள, காலாவதியான உணவு பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. உணவில் பச்சை காய்கறிகள் அதிகளவில் சேர்த்து சமைக்க வேண்டும் என்று சமையலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர் பிரியாகுமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் உடனிருந்தனர்.