கிருஷ்ணகிரி மாவட்டவிளையாட்டு அரங்க மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டவிளையாட்டு அரங்க மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 24 Sep 2023 7:30 PM GMT (Updated: 24 Sep 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தார். அவரை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் சரயு, மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மதியழகன் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ராயக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர் விடுதிக்கு சென்ற அவர், மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், விடுதியில் வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் காட்டிநாயனப்பள்ளி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். அத்துடன் மின்சார வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசு வழங்கும் சலுகைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story