சேலம் மரவனேரி ஆதிதிராவிடர் நல விடுதியில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'திடீர்' ஆய்வுமாணவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார்
சேலம் மரவனேரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டு அப்போது அவர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சேலம்
சேலம் மரவனேரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டு அப்போது அவர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மாணவர் விடுதி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தர்மபுரியில் நடந்த அரசு மற்றும் கட்சி விழாக்களில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) சேலம் அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு கலைஞர் உரிமைத்தொகைக்கான ஏ.டி.எம். கார்டுகளை பெண்களுக்கு வழங்குகிறார். இதற்காக அவர் நேற்று இரவு தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு காரில் வந்தார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர் ஓட்டலில் இருந்து இரவு கார் மூலம் சேலம் மரவனேரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்கு சென்றார்.
அடிப்படை வசதிகள்
பின்னர் விடுதியில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை பார்வையிட்டார். விடுதி காப்பாளரிடம் எத்தனை மாணவர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரங்களை கேட்டார். பிறகு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலரிடம் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் விசாரித்தார். அதன்பிறகு அவர் இரவு ஓட்டலுக்கு சென்றார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.