நாமக்கல் உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு


நாமக்கல் உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
x

நாமக்கல் உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் உழவர் சந்தையில் உள்ள கடைகளுக்கு இரும்பு தகடில் ஆன மேற்கூரை பொருத்தும் பணி உள்பட ரூ.28.38 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்த விவசாயிகளின் அடையாள அட்டையை பார்வையிட்ட அவர், விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த காய்கறிகளின் தரத்தை ஆய்வு செய்தார். உழவர் சந்தைக்கு வரும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த வெளிப்புற வியாபாரிகளின் கடைகளை அகற்ற அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் நாசர், விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story