கந்தம்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு


கந்தம்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

கந்தம்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையத்தில் பரமத்தி வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் தனியார் பள்ளிகளின் 192 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு பணியில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். வாகனங்களில் அவசர கால கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து டிரைவர்களிடம் கேட்டறியப்பட்டது. இதில் 10 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றின் தகுதி சான்று நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் குறைகளை சரி செய்து தகுதி சன்று பெற்றுக்கொள்ளும்படி சம்பவந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story