மொரப்பூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு


மொரப்பூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான தீபனா விஸ்வேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். அதன்படி இருமத்தூர் ஊராட்சியில் ரூ.11.78 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணி, வகுப்பம்பட்டி ஊராட்சி கடம்பரஅள்ளியில் ரூ.5.40 லட்சம் மதிப்பில் பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகள், நவலை ஊராட்சி சமத்துவபுரத்தில் ரூ.44 லட்சத்தில் 88 வீடுகள் சீரமைப்பு பணி, 9 புதிய வீடுகள் கட்டுமான பணி, தொப்பம்பட்டி ஊராட்சி மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் காத்திருப்போர் அறை மற்றும் போளையம்பள்ளி ஊராட்சியில் ரூ.8.88 லட்சத்தில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.வி.ரவிச்சந்திரன், ஜி.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் அன்பழகன், பழனியம்மாள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் இன்பசேகர், சுகந்தி, முரளிதரன், ஊராட்சி செயலாளர்கள் சிவக்குமார், செந்தில், ஜெயபிரகாசம், கணேசமூர்த்தி, சண்முகம், நல்லதேவி, கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story