பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
பாலக்கோடு:
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் சென்னை பேரூராட்சிகள் இயக்குனரக செயற்பொறியாளர் வைத்தியலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டபணிகள், திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் கழிப்பிடம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் சென்னப்பன்கொட்டாய் பகுதியில் உள்ள வளமீட்பு பூங்கா மற்றும் உரக்கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டு, பேரூராட்சி அலுவலர்களின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, உதவி பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் பழனி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.