காதப்பள்ளி அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல்
நாமக்கல் அருகே உள்ள காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து புத்தகங்களை வாசிக்க சொல்லி தெரிந்து கொண்டார். மாணவ, மாணவிகள் ஆங்கில பாடத்தை சரளமாக வாசிப்பதை கேட்டு, அதன் பொருள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் நன்கு கல்வி பயின்று ஒவ்வொருவரும் கற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை அறிந்து அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் பள்ளி கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story