ராசிபுரத்தில் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு


ராசிபுரத்தில் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி இயக்க கூடுதல் இயக்குனர் (பொது) பிரசாந்த் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் முத்துக்காளிப்பட்டி மற்றும் குருக்கபுரம் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு திட்டம் உள்பட அனைத்து திட்டங்களையும், நடைபெற்று வரும் இதர பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர்கள் பன்னீர்செல்வம், தமிழன்பன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், வனிதா, உதவி பொறியாளர்கள் சிவக்குமார் மற்றும் நைனாமலை ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story