அரூர் அருகே நான்கு வழி சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு


அரூர் அருகே நான்கு வழி சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jun 2023 1:00 AM IST (Updated: 7 Jun 2023 6:28 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி

அரூர்

முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு பணி திட்டத்தின்கீழ் திருவண்ணாமலையில் இருந்து அரூர் வழியாக தானிப்பாடி வரை நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தர்மபுரி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் அகலம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது அரூர் உட்கோட்டப்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர் கணபதி மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story