உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு


உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தேநீர் கடைகள், உணவகங்கள், மளிகை கடை மற்றும் பழக்கடைகள் ஆகியவற்றில் மயிலாடுதுறை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் உத்தரவின் பேரில் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் டீ தூள்கள், பாலின் தரம், பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளின் தரம், உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவை நடமாடும் ஆய்வக வாகனம் மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் தரமான பொருட்களை கொண்டு உணவுகள் தயாரிக்க வேண்டும் என்றும் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வில் மயிலாடுதுறை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரிமுத்து தலைமையில் ஆய்வுகள் சீர்காழி பகுதிகளில் நடைபெற்றது.


Next Story