ஆத்துப்பாலம் பகுதியில் போலீஸ் கமிஷனர் ஆய்வு


ஆத்துப்பாலம் பகுதியில் போலீஸ் கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Aug 2023 1:15 AM IST (Updated: 17 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்துப்பாலம் பகுதியில் போலீஸ் கமிஷனர் ஆய்வு

கோயம்புத்தூர்

உக்கடம்

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார்.

வாகன ஓட்டிகள் அவதி

கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் கோவை-அவினாசி சாலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன.

ஆனால் உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால், அந்தப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், ஆத்துப்பாலம் பகுதிக்கு சென்றார்.

அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். எந்தெந்த பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது? அதை தடுக்க வழி என்ன என்பது குறித்து பார்வையிட்டார். அத்துடன் அங்கு போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கண்காணிப்பு

மேலும் அங்கு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான ஆலோசனையையும் வழங்கினார். அதுபோன்று போலீசார் போக்குவரத்தை எப்படி சரிசெய்கிறார்கள் என்பதையும் அவர் கண்காணித்தார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கத்தக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு எடுக்கப்பட உள்ள மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story