பழங்குடியினருக்கு பட்டா வழங்க உதவி கலெக்டர் ஆய்வு


பழங்குடியினருக்கு பட்டா வழங்க உதவி கலெக்டர் ஆய்வு
x

பொன்னை அருகே பழங்குடியினருக்கு பட்டா வழங்க உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்

காட்பாடி தாலுகா பொன்னை அருகே பழங்குடியின குறவன் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த 8-ந் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினர் அந்தப் பகுதிக்கு சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஈஸ்வரி என்பவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பிச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று உதவி கலெக்டர் கவிதா தலைமையில் பழங்குடியின குறவன் குடிசை வாழ் மக்களுக்கு பட்டா வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்றும், பட்டா உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பட்டா இல்லாமல் வீடு கட்டி உள்ளவர்களுக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்யப்பட்டுவதாக கூறப்பட்டது. மேலும் பட்டா இல்லாமல் உள்ளவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.

காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மேல்பாடி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் கிராமநிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story