மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு


மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
x
தர்மபுரி

பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க, பார்மலின் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறதா? என பார்மலின் டெஸ்ட் கிட் உபகரணம் கொண்டு வெளிமாநில மற்றும் உள்ளூர் மீன்களை ஆய்வு செய்தனர். 2 கடைகளில் இருந்து தரம் குறைவான 20 கிலோ மீன்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். 2 கடைக்காரர்களுக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.


Next Story