நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு


நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு
x

நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

இந்திய ரெயில்வே வாரிய பயணிகள் சேவை குழுவின் தலைவர் சிவராஜ் கன்ஜி தலைமையில் குழு உறுப்பினர்கள் எட்டமனூர் ராதாகிருஷ்ணன், பொன் வி.பாலகணபதி ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.ரெயில் நிலையத்தின் நடைமேடைகளில் குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி முறையாக உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டதோடு நடைமேடைகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு பயணிகளுக்கு உரிய ரசீது வழங்கவும், விற்கும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை முறையாக குறிப்பிடவும் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட வர்த்தக மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மேலாளர் முருகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story