சமையல் கூடங்களில் சப்-கலெக்டர் ஆய்வு
வால்பாறையில் சமையல் கூடங்களில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
வால்பாறை பகுதியில் உள்ள 61 பள்ளிக் கூடங்களில் 1,300 குழந்தைகள் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
இதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் வால்பாறை, சோலையாறு நகர், வாட்டர்பால்ஸ் மற்றும் உருளிக்கல் ஆகிய 4 இடங்களில் தலா ரூ.36 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு, பாதுகாப்பு, சமைத்த உணவுகளை வாகனங்களில் எடுத்துச் செல்வது உள்பட அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்தார்.
மேலும் அவர், அந்த 4 சமையல் கூடங்களில் தயாரிக்கப்படும் காலை சிற்றுண்டிகள் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களுக்கும் எவ்வளவு நேரத்தில் கொண்டு செல்ல முடியும் என்று ஆய்வு செய்தார்.
அப்போது, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தாசில்தார் அருள்முருகன், நகராட்சி ஆணையாளர் (பொ) வெங்கடாசலம், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.