வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு


வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு
x

வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிடங்கியில் பழுதடைந்த 38 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 36 வாக்குப்பதிவு எந்திரங்களையும், 68 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் என மொத்தம் 563 வாக்கு பதிவு எந்திரங்களை சரி பார்த்து தேர்தல் ஆணைய உத்தரவின் படி பெங்களூருவில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story