மகளிர் உரிமைத்தொகை பெற உடனடி வங்கி கணக்கு


மகளிர் உரிமைத்தொகை பெற உடனடி வங்கி கணக்கு
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத்தொகை பெற உடனடி வங்கி கணக்கு தொடங்க அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து கிராமங்களிலும் பெறப்பட்டு வருகிறது. இந்த உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால் பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இந்த கணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது. மேலும் மாதாந்திர உதவி தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் வீடு தேடி வங்கி என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பணம் பெற முடியும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் அனைவரும் தலைமை தபால் நிலையம் அல்லது துணை, கிளை அஞ்சல் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story