பாலியல் தொந்தரவு குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
பாலியல் தொந்தரவு குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலியல் தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்க, பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு, அரவணைப்போடு இருக்க வேண்டியது அவசியம். மேலும் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் பாலியல் தொந்தரவு எந்தெந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை ெபற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் தேவைகள் பூர்த்தி ஆகாதபோதுதான் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகிறது. குழந்தைகள் படிப்பு மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்கள், விளையாட்டுகள் ஆகியவற்றில் நேரம் மற்றும் கவனம் செலுத்தும்போது தேவையற்ற விஷயங்களை யோசிப்பது தடுக்கப்படுகிறது. குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை கூடுமான அளவு தவிர்க்க வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவிட வேண்டும். ஹார்மோன் மாற்றங்களை பெற்றோர்கள் கவனித்து, குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதை உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்று அரியலூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணமதி தெரிவித்தார்.