ரேஷன் கடைகளை தூய்மையாக பராமரிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்


ரேஷன் கடைகளை தூய்மையாக பராமரிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்
x

ரேஷன் கடைகளை தூய்மையாக பராமரிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து 282 ரேஷன் கடை விற்பனையாளர்களுடன் ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், அனைத்து விற்பனையாளர்களும் தங்களது கடைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் பொறுப்புடனும், இணக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களிடம் கனிவுடன் பேசிப்பழக வேண்டும். விற்பனை கருவியுடன்(பி.ஓ.எஸ்.) விற்பனையாளர்கள் தங்களது கடையை தூய்மையாக பராமரித்து, மக்களிடம் கனிவான சேவையை வழங்க வேண்டும். இணைப்பில் பிரச்சினை ஏதேனும் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கடையின் தகவல் பலகையில் விற்பனையாளர்களின் பெயர், தொலைபேசி எண், பொருட்களின் இருப்பு விவரம் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வப்போது தேவைக்கேற்ப பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும், என்றார்.

மேலும் பொது வினியோக திட்ட சேவையில் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற ரேஷன் கடை விற்பனையாளர்கள், வட்டாரத்திற்கு 3 பேர் வீதம் 4 வட்டாரத்திற்கு 12 விற்பனையாளர்களின் செயல்பாடுகளை பாராட்டி பரிசுகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன், துணை பதிவாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story