காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

அனைத்து அரசுத்துறை பொது காப்பீட்டு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஒத்தக்கடையில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு மதுரை மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். என்.பி.எஸ். திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஊதிய மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு அதிகாரிகள் சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். மதுரை மண்டல பொது காப்பீட்டு ஊழியர் சங்க இணைச்செயலாளர் முத்துக்குமரன், நேஷனல் காப்பீட்டு அதிகாரிகள் சங்க அய்யாசாமி, பொது காப்பீட்டு ஊழியர்கள் அகில இந்திய சங்க திருச்சி செயலாளர் செந்தில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜமகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story