ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி; நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஆய்வு


ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி; நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஆய்வு
x

ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருச்சி

திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் கட்டுமான பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243 கோடியே 78 லட்சம் மதிப்பிலும், கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமான பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106 கோடியே 20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.349 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரில் புதிதாக ரூ.9 கோடியே 90 லட்சம் மதிப்பில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தின் கட்டுமான பணிகள், கொட்டப்பட்டு குளத்தில் ரூ.95 லட்சத்தில் நடைபாதையுடன் கூடிய வண்ண மின்விளக்குகள் அமைக்கும் பணி, குளத்தின் கரையை அழகுப்படுத்தும் பணியையும், புத்தூரில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

1 More update

Next Story