ஒருங்கிணைந்த சிறை அதாலத் :24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்
ஒருங்கிணைந்த சிறை அதாலத்தில் 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
விழுப்புரம் கடலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சிறை அதாலத் கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணை தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜவகர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டபணிகள் ஆணை செயலாளர் மற்றும் தலைமை நீதித்துறை நடுவர் பிரபாகர், கடலூர் நீதித்துறை நடுவர் எண் 3 ரகோத்தமன் மற்றும் வானூர் வட்ட சட்டபணிகள் குழு தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
பின்னர் சிறை அதாலத் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 கைதிகளின், 18 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு 11 கைதிகளும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 8 கைதிகளின் 13 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு, 6 கைதிகளும் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 8 கைதிகளின் 10 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு 7 கைதிகளும், ஆக மொத்தம் 24 கைதிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் கடலூர் மத்திய சிறை அலுவலர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.