எறையூரில் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்றம், கிராம நிர்வாக அலுவலக கட்டிட கட்டுமானப்பணி


எறையூரில் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்றம், கிராம நிர்வாக அலுவலக கட்டிட கட்டுமானப்பணி
x

எறையூரில் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்றம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிட கட்டுமானப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி 100-ன் கீழ் எறையூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, எறையூர் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65ஆயிரம் மதிப்பீட்டில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சத்து 32ஆயிரம் ஊராட்சிகளின் பங்கு தொகை ரூ.6 லட்சத்து 32ஆயிரம், 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் (கிராம செயலகம் கட்டிடம் அமைத்தல்) ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பெரம்பலூர் எம்.எல்.ஏ..பிரபாகரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story