டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
x

பெரும்புலிப்பாக்கத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்புலிப்பாக்கம் பகுதியில் 30-க்கும் மேற்பட்டோர் கொசு உற்பத்தி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வீடுகளின் பின்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டியில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பழைய டயர், உடைந்த பாட்டில்கள், டீ கப்புகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர். சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story