ஆனைமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்
ஆனைமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனைமலை
ஆனைமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலக்கடலை
ஆனைமலை தாலுகாவில் தென்னை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நெல், நிலக்கடலை மற்றும் பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், பெரியபோது, மார்ச்சிநாயக தென்சங்கம்பாளையம், சோமந்துறை, ஜல்லிபட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்த நிலையில், அறுவடையில் தரமான காய்கள் கிடைத்ததாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஆனால் நிலக்டலை கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.45 வரை கிடைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இழப்பிடுகளை தவிர்க்க...
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:- ஆனைமலை தாலுகா பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடந்து வருகிறது. தற்போது உள்ள நிலவரப்படி 15 சதவீத ஈரப்பத நிலையில் ரூ.40 முதல் ரூ.45-க்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் போது ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும். எனவே இழப்பிடுகளை தவிர்க்க நிலக்கடலைகளை 8 சதவீத ஈரப்பத நிலையில் காயவைத்து அரசு வேளாண்மை விற்பனைகூட கிடங்குகளில் முதல் 15 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளவும். பின்னர் ஒரு நாளைக்கு குவிண்டாலுக்கு 10 பைசா அளவில் செலுத்தி நிலக்கடலை போன்ற பயிர்களை சேமித்து வைத்து சந்தை விலை கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விைல உயரும் போது நிலக்கடலையை விற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.