காரியாபட்டி உழவர்சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்


காரியாபட்டி உழவர்சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்
x

காரியாபட்டி உழவர் சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி உழவர் சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உழவர் சந்தை

காரியாபட்டி அருகே ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், எஸ்.கல்லுப்பட்டி, சீகனேந்தல், முஸ்டக்குறிச்சி, சொக்கனேந்தல், மறைக்குளம், தோப்பூர், சித்து மூன்றடைப்பு, கழுவனச்சேரி, தோணுகால், நந்திக்குண்டு, கம்பிக்குடி, சூரனூர், தொடுவன்பட்டி, வரலொட்டி, புல்லூர், அழகியநல்லூர் கடமன்குளம், கீழ உப்பிலிக்குண்டு உள்பட ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் காய்கறிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் விலையும் காய்கறிகளை மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் காரியாபட்டியில் உழவர் சந்தை அமைக்கப்பட வேண்டும் என்று காரியாபட்டி வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கடந்த 2009-ம் உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கும் பணி

உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டும் அங்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் காரியாபட்டி பஸ் நிலையத்தை சுற்றிலும் சாலைகளில் அதிகமான காய்கறி கடைகள் போடப்பட்டு வந்ததால் உழவர் சந்தைக்குள் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் வராததால் உழவர் சந்தையில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் விற்பனையாகாமல் இருந்து வந்தது.

இதையடுத்து உழவர் சந்தைக்குள் காய்கறிகள் எந்த விவசாயிகளும் விற்பனை செய்ய முன்வரவில்லை. இந்நிலையில் தற்போது உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய ஏதுவாக உழவர் சந்தை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய உள்ளனர். மேற்கண்ட தகவலை உழவர்சந்தை வேளாண்மை அலுவலா்கள் ரியாஸ் அகமது, கருப்பத்தேவன் ஆகியோர் தெரிவித்தனர்.

1 More update

Next Story