புதிய மீன் தொட்டிகள் கட்டும் பணி தீவிரம்
புதிய மீன் தொட்டிகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அணையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்காக கட்டப்பட்டிருந்த மீன் தொட்டிகள் முற்றிலும் சேதமடைந்ததால் குஞ்சுகள் வளர்க்கப்படாமல் இருந்தது. பயன்பாடு இல்லாமல் இருந்த மீன் தொட்டிகளை மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேதமடைந்த மீன் தொட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு 10 புதிய மீன் தொட்டிகள் கட்டும்பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் மீன் ஆய்வாளர் அலுவலகம், ஆய்வாளர் தங்கும் அறை, மின்சார வசதி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. மீன் தொட்டிகளுக்கு தண்ணீர் வசதிக்கு புதிய கிணறு தோண்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மீன் தொட்டியில் பல வகையான மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதனால் மீன்பிடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.