குறுவை சாகுபடி பணி தீவிரம்


குறுவை சாகுபடி பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 10:01 AM GMT)

நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணை

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த காவிரி நீர் கல்லணைக்கு வந்தது. பின்னர் கல்லணையில் இருந்து கொள்ளிடம், காவிரி, கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்களுக்கு உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் முன்கூட்டியே சம்பா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், அறுவடை பணி முடிந்து குறுவை சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் பூவனூர், தஞ்சை சாலை, மன்னை சாலை, ராஜப்பையன் சாவடி, காளாச்சேரி, கோவில்வெண்ணி, அனுமந்தபுரம், ரிஷியூர், சித்தமல்லி, பரப்பனாமேடு, கடம்பூர், மேலபூவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடவு பணி முடிந்து தற்போது பயிர்களுக்கு மேல் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடு பட்டு வருகின்றனர்.


Next Story