கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் பணி தீவிரம்


கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் பணி தீவிரம்
x

திருக்கடையூர் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேரடி நெல்விதைப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அதிக அளவில் பெய்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளான திருக்கடையூர், டி.மணல்மேடு, வளையல்சோழகன், நட்சத்திரமாலை, கண்ணங்குடி, கிள்ளியூர், கிடங்கல், மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூர், ஆக்கூர், மடப்புரம், அப்புராசபுரம்புத்தூர், கருவேலி, அன்னப்பன்பேட்டை, தலச்சங்காடு, மாத்தூர் ஆகிய பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நாற்றங்கால் அமைத்தும், நேரடி நெல்விதைப்பின் மூலமும் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

கொள்முதல் நிலையங்களில் விற்பனை

மேற்கண்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். மேலும் சம்பா சாகுபடியில் சன்னரகம் நெல் குவிண்டாலுக்கு ரூ.2060-க்கும், மோட்டா ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2040-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

குறுகிய கால நெற்பயிர்கள் முன்கூட்டியே பயிரிட்டதாலும் அதிக அளவில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தும், அழுகியும் வீணாகி வந்தது. தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்களை விவசாயிகள் திருக்கடையூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.


Next Story