கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி


கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:23+05:30)

கோவில்பட்டியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில் கோவில்பட்டி கே.ஆர். கலை கல்லூரி, ஜி.வி.என். கல்லூரி, சிவகாசி அய்யனார்- ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இலக்கிய கவிதை, சிறுகதை, மாதிரி காட்சிப்படுத்துதல், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், கருத்தரங்கம் மற்றும் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி கமிட்டி உறுப்பினர்கள் செல்வகணேஷ், பாஸ்கரன், ரமேஷ், காமராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசை சிவகாசி அய்யநாடார்- ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்கள் பெற்றனர். பரிசை கல்லூரி முதல்வர் செல்வராஜ் வழங்கினார். பேராசிரியர் பிரின்சி நன்றி கூறினார்.


Next Story